V4UMEDIA
HomeReviewMika Mika Avasaram

Mika Mika Avasaram

Review By :- V4uMedia Team

Release Date :- 08/11/2019

Movie Run Time :- 1.36 Hrs

Censor certificate :- U

Production :- V House Productions

Director :- Suresh Kamatchi

Music Director :- Ishaan Dev

Cast :- Sri Priyanka, Harish, Muthuraman, E.Ramadoss, Linga,Aravindh, Saravana Shakthi, V.K. Sundar, Guna, Vetri Kumaran, Seeman

மிக மிக அவசரம் – விமர்சனம்

சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள ‘மிக மிக அவசரம்’.ஸ்ரீப்ரியங்கா, முத்துராமன், ஹரிஷ், ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார் இயக்குநர் ஜெகன்.

பெண் போலீஸான நாயகி ஸ்ரீபிரியங்கா, உயர் போலீஸ் அதிகாரியால் தனிப்பட்ட கோபத்திற்கு ஆளாகி பழிவாங்கப்படுகிறார். அதற்காக வெளிநாட்டு அமைச்சர் வரும் போது மேம்பாலம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுகிறார். உச்சி வெயிலில் கடமைக்காக கால் வலிக்க அந்த மேம்பாலத்தில் நின்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீபிரியங்காவுக்கு, உடல் உபாதை சம்மந்தமான பிரச்சினை வருகிறது. அத்தனை வலிகளையும் தாங்கினாலும், மனிதர்களால் தாங்க முடியாத பிரச்சினையில் சிக்கி தவிக்கும் ஸ்ரீபிரியங்காவை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடும் உயர் போலீஸ் அதிகாரியான முத்துராமன், அவரை அந்த இடத்தைவிட்டு நகராதபடி செய்ய, ஸ்ரீபிரியங்கா துடிப்பது, நம் இதயத்தையே கனக்க செய்கிறது தான் படத்தின் கதை.

எளிமையான, சாதாரணமான, சின்னச்சிறு மையக்கரு என்றாலும், அதற்கு அழுத்தமான திரைக்கதை அமைத்து, உயிரோட்டத்துடன் கூடிய காட்சிகளோடு இயக்கியிருக்கும் சுரேஷ் காமாட்சியும், நிஜமாகவே அப்படி ஒரு பிரச்சினையில் பெண் காவலர் இருந்தால், என்ன நடந்திருக்கும், அவர் எப்படி எல்லாம் கஷ்ட்டப்பட்டிருப்பார் என்பதை நம் கண் முன் காண்பித்த நடிகை ஸ்ரீபிரியங்காவும், இப்படத்தை வலிமையை சேர்க்கிறது.

ஸ்ரீபிரியங்காவை சுற்றி நகரும் கதைப் போல், அவரை சுற்றி வரும் சில கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் மனதில் நின்றுவிடுகிறார்கள். பழிவாங்கும் போலீஸ் அதிகாரியாக வரும் முத்துராமன் கண்களிலேயே வில்லத்தனத்தைக் காட்டி மிரட்டுகிறார்.


சில நிமிட காட்சிகளில் வரும் சீமான், தனது கம்பீர தோற்றத்தினாலும், பேச்சினாலும் கவருகிறார்.இஷாந்த் தேவ் இசையும், பாலபரணியின் ஒளிப்பதிவும் சிறப்பு .கே.பி.ஜெகனின் கதை, வசனம் ஆகியவற்றில் இருக்கும் வீரியத்தை, இயக்குநர் சுரேஷ் காமாட்சியின் திரைக்கதையும், காட்சிகளும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.


மொத்தத்தில், ‘மிக மிக அவசரம்’ சினிமா ரசிகர்கள் மட்டும் அல்ல, அனைத்து மக்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.நல்ல தரமான படத்தை அளித்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 08/11/2019 Movie Run Time :- 1.36 Hrs Censor certificate :- U Production :- V House Productions Director :- Suresh Kamatchi Music Director :- Ishaan Dev Cast :- Sri Priyanka, Harish, Muthuraman, E.Ramadoss, Linga,Aravindh, Saravana Shakthi, V.K....Mika Mika Avasaram