Review By :- V4uMedia Team
Release Date :- 22/12/2019
Movie Run Time :- 2.48 Hrs
Censor certificate :- A
Production :- E4 Entertainment
Director :- Gireesaya
Music Director :- Radhan
Cast :- Dhruv Vikram, Banita Sandhu, Priya Anand
ஆதித்ய வர்மா- விமர்சனம்
விஜய் தேவரகொன்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி’ தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகியிருக்கிறார்.
மருத்துவக் கல்லூரியில் ஃபைனல் இயர் படிக்கும் மாணவரான துருவ் விக்ரமிற்கும் ஜூனியர் மாணவியான பனிட்டா சந்துவுக்கும் காதல் ஏற்படுகிறது. இதனால் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள்.
இவர்களின் காதல் விவகாரம் பனிட்டா சந்துவின் அப்பாவிற்கு தெரியவர, ஜாதியைக் காரணம் காட்டி வேறு ஒருவருக்கு பனிட்டா சந்துவை கல்யாணம் செய்து கொடுக்கிறார். நீண்ட இடைவெளியில் சந்திக்கும் காதலர்கள் எடுக்கும் முடிவு தான் படத்தின் திரைக்கதை, க்ளைமாக்ஸ்!
காதலைக்கூட அதிரடியாக வெளிப்படுத்தும் முரட்டுக்குணம் கொண்ட கேரக்டரில் துருவ் விக்ரம் காட்சிக்கு காட்சி அசத்துகிறார். கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார்.
முறுக்கேறிய இளமையில் ஃபுல் எனர்ஜியோடு நடிக்கும் துருவ் விக்ரமின் உடலும், குரலும் கம்பீரமாக இருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு ஒரு ஹான்ட்சம் ஹீரோ !
நடிகையாக நடித்திருக்கும் ப்ரியா ஆனந்த். ‘கடலோரக் கவிதைகள்’ ராஜா, துருவின் நண்பராக நடித்திருக்கும் அன்புதாசன், ராஜா, அச்யுத் குமார் என அனைவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ரவி. கே.சந்திரனின் ஒளிப்பதிவால் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ரதனின் இசை சூப்பர் .
இளைஞர்கள் விரும்பும் வகையில் இயக்குநர் கிரிசாயா ஒவ்வொரு காட்சியையும் வடிவமைத்திருக்கிறார்.
மொத்ததில், இளைஞர்களை வேட்டையாடுவார் ‘ஆதித்ய வர்மா’ .