V4UMEDIA
HomeReviewIrandam Ulagaporin Kadaisi Gundu

Irandam Ulagaporin Kadaisi Gundu

Review By :- V4uMedia Team

Release Date :- 06/12/2019

Movie Run Time :- 2.21 Hrs

Censor certificate :- U

Production :- Neelam Productions

Director :- Athiyan Athirai

Music Director :- Tenma

Cast :- Attakathi Dinesh , Anandhi , Riythvika, Lijeesh , John Vijay , Ramesh Thilak G. Marimuthu . Munishkanth, Rama

பழைய இரும்புக் கடையில் லாரி டிரைவராக வருகிறார் கதாநாயகன் தினேஷ், தனதுதொழில் மீது அதீத பக்தி மேலும் சொந்தமாக லாரி ஒன்று வாங்க வேண்டுமென்கிற லட்சியத்துடன் இருக்கிறார். அதே நேரத்தில் டீச்சராக வரும் ஆனந்தி மீது காதலும் கொள்கிறார். ஆனால், ஜாதி பாகுபாட்டால் ஆனந்தி வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது. கதையின் ஒருபக்கம் இப்படிபோக, மறுபுறம் அழிப்பதற்காக கடலில் போடப்பட்ட இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட குண்டு, கரை ஒதுங்கி அந்த கடைக்கு வருகிறது. வெடிக்கும் நிலையில் இருக்கும் அந்த குண்டைத் தேடி அரசும், மக்களுக்கு தோலுரித்து காட்ட சமுக நல ஆர்வலர்கள் இவர்களுடன் பத்திரிக்கையாராக ரித்விகா என பரபரக்கிறது திரைக்கதை. இறுதியாக அந்த குண்டு என்ன ஆகிறது? தினேஷ் இவற்றில் எப்படி சம்மந்தப்படுகிறார் என்பதே முழுக்கதை.

விமர்சனம்:‘அட்டைக்கத்தி’ ‘விசாரணை’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் வித்தியாச களத்துடன் களமிறங்கியுள்ளார் தினேஷ். லாரி டிரைவராக அப்படியே கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியுள்ளார் தினேஷ், எப்பவும் போல யதார்த்த நடிப்பு கூடுதல் பலம். ‘கயல்’ ஆனந்தி அழகான கதாப்பாத்திரம் நேர்த்தியாகவும், காதல் காட்சிகளை தொய்வில்லாமல் பார்த்து கொள்கிறார். ஆனால்,இவரைவிட ரித்விகாவிற்கு தான் அழுத்தமான கதாப்பாத்திரம், படமுழுக்க பரபரப்பான நடிப்பு கூடுதல் கவனம் பெறுகிறார்.

இவர்கள் தவிர சக தொழிலாளியாக வரும் முனிஷ்காந்த், இரும்பு கடையின் உரிமையாளராக வரும் மாரிமுத்து என கதாப்பாத்திர தேர்வும் சரி, நடிப்பும் சரி நிறைவு. கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, கலை இயக்குனர் ராமலிங்கம் மற்றும்
எடிட்டிங் செல்வா ஆகியோர் படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளனர். தென்மாவின் இசையில் ‘மௌலியோ மௌலி’ பாடல் மற்றும் பின்னணி இசை அருமை (அதிலும் குண்டு வரும் காட்சிகளில் மிரட்டல்).

அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை, தமிழ் சினிமாவில் புதிய களத்துடன், கச்சிதமான நடிகர்கள், நேர்த்தியான திரைக்கதை மற்றும் டெக்னீஷியன்களுடன் இறங்கியுள்ளார். சொல்ல வந்த விஷயத்தை (சில தடுமாற்றங்கள் இருந்தாலும்)
இறுதியில் பார்வையாளர்களிடம் கடத்தியுள்ளார். படத்தின் ஆரம்பத்தில் இருந்த வேகம் பிறகு சற்று குறைகிறது, மீண்டும் இரண்டாம் பாதிக்கு பிறகு தான் வேகமெடுக்கிறது. மேலும், பாடல்கள் இடையில் கதையின் போக்கை மாற்றுவது போல் உணர்வு. இருந்தாலும் இதுபோன்ற புதிய களத்திற்கும், வசனங்களுக்கும் இயக்குனர் அதியன் ஆதிரைக்கும், தயாரிப்பளார் பா. இரஞ்சித்திற்கும் பாராட்டுக்கள்.

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 06/12/2019 Movie Run Time :- 2.21 Hrs Censor certificate :- U Production :- Neelam Productions Director :- Athiyan Athirai Music Director :- Tenma Cast :- Attakathi Dinesh , Anandhi , Riythvika, Lijeesh , John Vijay ,...Irandam Ulagaporin Kadaisi Gundu