V4UMEDIA
HomeReviewHero Tamil Movie

Hero Tamil Movie

Review By :- V4uMedia Team

Release Date :- 20/12/2019

Movie Run Time :- 2.44 Hrs

Censor certificate :- U

Production :- KJR Studios

Director :- P. S. Mithran

Music Director :- Yuvan Shankar Raja

Cast :- Sivakarthikeyan , Master Raghavan ,Abhay Deol, Arjun , Kalyani Priyadarshan , Ivana, Shyam Krishnan, Robo Shankar , Elango Kumaravel , Azhagam Perumal , Prem

சிறுவயது முதலே சக்திமான் தொடரை பார்த்து சூப்பர் ஹீரோவாக வேண்டும் கனவுடன் வளரும் சிவகார்த்திகேயன்(சக்தி), வேறு வழியின்றி பணத்திற்காக போலி சான்றிதழ் அடித்து சம்பாதித்து, தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்து, கமிஷன் பெறுவது என இருந்து வருகிறார். அப்படிப்பட்ட ஒருவன் எப்படி? எந்த சூழலில் சூப்பர் ஹீரோவாக ஆனார்? என்பதே சுருக்கமான கதை.


விமர்சனம்: சிவகார்த்திகேயன், வழக்கம் போலவே அவரது பாணியில் நடித்திருந்தாலும் இப்படத்தை பொறுத்தவரை சிவகார்த்திகேயனும், அவரை சூப்பர் ஹீரோவாக மாற்றும் அர்ஜுனும் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளனர். அர்ஜுனின் கதாப்பாத்திரமும் ஹீரோ அளவிற்கு அமைந்தது மாஸ். தமிழில் அறிமுகமாகும் கல்யாணி ப்ரியதர்ஷன், குறைந்த காட்சிகளே வந்தாலும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. அதே போல் ரோபோ ஷங்கரும் இன்டெர்வல் வரைதான் வருகிறார், இருந்தாலும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ஏழைக் குடும்பத்து பெண்ணாக, பெரிய கனவுகளையும் அதற்கேற்ற திறமைகளையும் வைத்து போராடும் பெண்ணாக இவானா சூப்பர்.


இவர் யார் என்ற தெளிவான பின்னணி இல்லையென்றாலும் வில்லனாக வரும் அபய் தியோல் நடிப்பிலும், சரி அவருக்காக கொடுக்கப்பட்ட குரலிலும் மிரட்டியுள்ளார். ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ரூபனின் எடிட்டிங் ரூபனும் டாப் கிளாஸ். அதே போல் இசையை பொறுத்தவரையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் பின்னணி இசை வழக்கம் போல கிளாஸ். இயக்குனர் மித்ரன் எடுத்துக்கொண்ட கதைக்களம் மிக முக்கியமான ஒரு வாழ்வியல் மற்றும் உணர்வுகள் சார்ந்த பிரச்சனையை பேசுகிறது. திரைக்கதை ,வசனங்கள் ஒவ்வொன்றும் மிகவும் ஆழமாக உள்ளது.


குறிப்பாக (இந்தியாவில் மட்டும் தான் தன் கனவுகளை பெற்றோர்களிடம் சொல்லவே பிள்ளைகள் அஞ்சுகிறார்கள்), (பெற்றோர்கள் பிள்ளைகளிடம் ரிப்போர்ட் கார்டை பார்பதைபோல், அவர்களது ரஃப் நோட்டையும் பாருங்கள் அவர்களுக்கென தனித் திறமைகள் அதில்தான் இருக்கும்) என்பது போன்ற வசனங்கள் பெற்றோர்கள் மனதில் யோசிக்கவைக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 20/12/2019 Movie Run Time :- 2.44 Hrs Censor certificate :- U Production :- KJR Studios Director :- P. S. Mithran Music Director :- Yuvan Shankar Raja Cast :- Sivakarthikeyan , Master Raghavan ,Abhay Deol, Arjun ,...Hero Tamil Movie