
பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால கலைப்பயணத்தை போற்றும் வகையில், சென்னையில் ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் மனதைத் தொடும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவில் முத்திரை பதித்தவர் கௌதம் மேனன். அவரது படங்களின் காலத்தால் அழியாத இசையை மீண்டும் மேடையில் கொண்டுவர உள்ளது இந்த நிகழ்ச்சி.
இந்த இசை நிகழ்ச்சியில், கௌதம் வாசுதேவ் மேனனின் படங்களில் முக்கிய அங்கமாக இருந்த பிரபல பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் இணைய உள்ளனர். கார்த்திக், சித் ஸ்ரீராம், பிளேஸ், பால் டப்பா, ஆல்போன்ஸ், ஷாஷா திருப்பதி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா மற்றும் சாருலதா மணி உள்ளிட்ட நட்சத்திரக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த இசை நிகழ்ச்சி, பல தலைமுறைகளை கடந்த ஐகானிக் பாடல்களின் இசை விருந்தாக அமையவுள்ளது.

நவீனமும் பழமையும் கலந்த ஒரு இசை பயணமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ நிகழ்ச்சியில், கடந்த 25 ஆண்டுகளில் கௌதம் வாசுதேவ் மேனன் படங்களின் அடையாளங்களாக விளங்கிய காதல், ஏக்கம், இளமை மற்றும் நகரத்து காதலை வெளிப்படுத்தும் பல பாடல்களை ரசிகர்கள் நேரில் கண்டு ரசிக்கலாம்.
ப்ரீத்தி ஸ்ரீவிஜயனின் ‘ஒரு ஊரிலே ஒரு ஃபிலிம் ஹவுஸ்’ மற்றும் சித்து நாயர் இணைந்து தயாரிக்கும் இந்த நிகழ்ச்சி, பிப்ரவரி 1-ஆம் தேதி மாலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது.
இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது BookMyShow தளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
https://in.bookmyshow.com/events/yennodu-vaa-veedu-varaikkum/ET00482440

















