V4UMEDIA
HomeNewsBollywoodவார்-2 திரைப்படத்திற்காக டப்பிங் பேசிய 'ஜூனியர் என்.டி.ஆர்'!

வார்-2 திரைப்படத்திற்காக டப்பிங் பேசிய ‘ஜூனியர் என்.டி.ஆர்’!

யஷ்ராஜ் ஃபிலிம்ஸின் ‘வார்-2’ படத்திற்கு டப்பிங் பேசிய ‘மேன் ஆஃப் தி மாஸஸ்’ ஜூனியர் என்.டி.ஆர்!

அயன் முகர்ஜி இயக்கத்தில் யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘வார்-2’ திரைப்படம் 2025-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும். மேலும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள இந்த பான்-இந்தியா ஆக்‌ஷன் படத்தில் தனது காட்சிக்கு டப்பிங் பேசியதைக் காட்டும் ஒரு வீடியோ வெளியானது.

ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் ‘வார்-2’ திரைப்படம், புகழ்பெற்ற யஷ்ராஜ் பிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ் பிளாக்பஸ்டர் வெற்றிப்பட தொடர்வரிசையின் ஆறாவது பாகமாகும். ‘வார்-2’ படத்தில் ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானியுடன் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ளார்.

பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளுடன் தீவிரமான, பரபரப்பான கதைக்களத்துடன் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹ்ரிதிக் ரோஷன் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் ‘வார்-2’ படம் ஒரு பரபரப்பான காட்சி அனுபவமாக இருக்கும் என படக்குழு உறுதியளிக்கிறார்கள்.

இந்த படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Most Popular

Recent Comments