ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘வார்-2’ டீசர்
50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்தது!
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில், 2025-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘வார்-2’ டீசரை இந்தியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான 20/05/2025 – அன்று வெளியிட்டது.

இவர்களுடன் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அயன் முகர்ஜி இயக்கியுள்ள ‘வார்-2’ திரைப்படம், ஆகஸ்ட்-14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தொடர் வெற்றிகளை மட்டுமே தன்வசம் கொண்டுள்ள YRF ஸ்பை யுனிவர்ஸ் படவரிசையில் ‘வார்-2’ ஆறாவது திரைப்படமாகும்.
டீசரை இங்கே பார்வையிடவும் 👇