V4UMEDIA
HomeUncategorizedசென்னையில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய சுவாமி சித்தானந்த கிரி!

சென்னையில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய சுவாமி சித்தானந்த கிரி!

YSS/SRF முதல்வரும் ஆன்மீக தலைவரும் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சித்தானந்த கிரி அகவெழுச்சியூட்டும் சென்னையிலுள்ள திருவான்மியூரில் ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா /ஸெல்ஃப் ரியலைசேஷன் பெல்லோஷிப் (YSS/SRF)-இன் முதல்வரும் ஆன்மீக தலைவருமான சுவாமி சித்தானந்த கிரி அவர்கள் சென்னை-திருவான்மியூரில் அமைந்துள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில்  கூடியிருந்த பலதரப்பட்ட சுமார் 1300  பார்வையாளர்கள் முன்னிலையில் ஆன்மீகம் மற்றும் கிரியா யோகா பற்றிய அகவெழுச்சியூட்டும் ஓர் ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

சென்னைக்கு அருகில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சாதனாலயாவை YSS – இன் புதிய ஆசிரமமாக செப்டம்பர் 15, 2024-அன்று அவர் அறிவித்ததை நினைவு கூர்ந்தார்.

சுவாமி சித்தானந்த கிரி ‘கிரியா யோகா’ பற்றிய ஆழ்ந்த அறிவினை பகிர்ந்தார். “கிரியா யோக சாதனா’ என்பது ‘ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின்’ முடிவற்ற அருளாசிகள், குருவின் போதனைகள், அப்போதனைகளைப் வாழ்க்கைக் கலையாக பயிற்சி செய்யும் பக்தர்களின் சமூகம் ஆகியவற்றை கொண்டது” என்று குறிப்பிட்ட அவர், ‘ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்’ அருளிய கிரியா யோகம் மற்றும் அவரது மற்ற போதனைகளைப் பரப்புவதில் தமது அமைப்பிற்கு உள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

இதற்கு முன்பாக காலையில் கூடியிருந்த 1000 பக்தர்களுக்கு சிறப்பு 3 மணிநேர தியானத்தை வழிநடத்தினார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Screenshot

இவ்விழாவில் அவர், பக்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த “Holy Science” என்ற  புத்தகத்தின் தமிழாக்கத்தை “கைவல்ய தரிசனம்” என்ற பெயரிலும், “Metaphysical Meditation” என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை “பரதத்துவ தியானங்கள்” என்ற பெயரிலும் வெளியிட்டார். YSS/SRF – ஆன்மீக அமைப்பானது 100 ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறப்பாக விற்பனையாகும் “ஒரு யோகியின் சுயசரிதம்” புத்தகத்தை எழுதியவரும், உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட ஆன்மீக ஆசானான ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்டது.

Most Popular

Recent Comments