ஒய் எஸ் எஸ் கிரியா யோகப் பாடங்கள் தனது வாழ்வை முற்றிலும் மாற்றியது எப்படி என்று யூட்யூப் காணொளி வாயிலாக விளக்கியுள்ளார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!
கீழ்க்கண்ட இதயத்தைத் தொடும் காணொளியில், பத்ம விபூஷன் மற்றும் ‘சூப்பர் ஸ்டார்‘ ரஜினிகாந்த் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (ஒய் எஸ் எஸ்) பாடங்களின் வாயிலாக போதிக்கப்பட்ட கிரியா யோகத்துடனான தனது ஆழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கிரியா யோகத்தின் பயிற்சி தனது வாழ்வில், அக அமைதி, வலிமை, தெய்வீகக் கருணை உணர்வு ஆகியவற்றைக் கொணர்ந்தவாறு, எப்படி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
‘சூப்பர் ஸ்டார்‘ ரஜினிகாந்த் அவர்களின் முறை தவறாத பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துடன், எப்படி குருதேவரின் தெய்வீக சக்தி ஒரு பயிற்சியளிப்பவரின் மூலம் எவ்வாறு சிரமமின்றி வேலை செய்கிறது என்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பார்வையாளர்களை தாங்களே ஒய் எஸ் எஸ் பாடங்களை ஆய்வு செய்யவும்; கிரியா யோகத்தின் நம் மனதையும் உடலையும் உருமாற்றும் சக்தியை அனுபவிக்கவும் ஊக்குவித்துள்ளார்.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவைப் பற்றியும் கிரியா யோக தியானப் பாதையைப் பற்றியும் மேலதிகமாகக் கற்றுக் கொள்ள கீழ்க்கண்ட வலைத்தளப்பதிவை பயன்படுத்திக் கொள்ளவும்.
https://yssofindia.org/ta/meditation/the-kriya-yoga-path-of-meditation-yogoda-satsanga-society
நீங்கள் இந்தியா, நேபாளம், அல்லது இலங்கையில் வாழ்கிறீர்கள் என்றால், பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட ஆன்ம–அனுபூதிக்கான யோகதா சத்சங்கப் பாடங்களுக்கு மற்றும் தியான அறிவியலையும் சமச்சீர் ஆன்மீக வாழ்க்கையையும் உள்ளடக்கிய இல்லக்கல்விப் படிப்பிற்கு, விண்ணப்பம் செய்வதன் மூலம் கிரியா யோக அறிவியலை உங்களால் கற்றுக்கொள்ள முடியும்: https://yssofindia.org/ta/yss-lessons
உலகம் முழுவதிலும் உள்ள மற்ற நாடுகளில் வாழ்வோர் பரமஹம்ஸ யோகானந்தருடைய ஆன்மீகப் பணியின் சர்வதேசத் தலைமையகமான ஸெல்ஃப்–ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் மூலம் இந்தப் புனிதப் போதனைகளுக்காக விண்ணப்பம் செய்யலாம்: https://yogananda.org/
யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் நூலை வாசிக்க: https://yssofindia.org/product/autobiography-of-a-yogi
தமிழில் ஒரு யோகியின் சுயசரிதையின் இலவச ஆடியோ புத்தகத்தைக் கேட்க: https://yssofindia.org/get-a-free-autobiography-of-a-yogi
உங்களுக்கு அருகே உள்ள ஓர் ஒய் எஸ் எஸ் தியான மையத்தைக் கண்டுபிடிக்க, எமது ஒய் எஸ் எஸ் இணையதளத்தில் உள்ள ஆசிரமங்கள், கேந்திரங்கள், மண்டலிகள் ஆகியவற்றின் பட்டியலைப் பாருங்கள்: https://yssofindia.org/list-of-centres