தமிழ் சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ‘இசைஞானி’ இளையராஜா. இவரது சகோதாரரும் இயக்குனருமான கங்கை அமரனுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்தவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்பிரபு,இளையவர் நடிகர்,பாடகர்,இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆவர். இருவரும் கலைத்துறையில் பன்முகங்கள் கொண்டவர்கள். தற்போது பிரேம்ஜி அவர்களுக்கு வரும் ஜூன் 9-ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்குபெறும் எளிமையான திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரேம்ஜியின் திருமணப்பத்திரிக்கை இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி கொண்டிருந்தது. தனது சகோதாரரின் திருமணம் குறித்து கலகலப்பாக, தனது அதிகாரப்பூரவ ‘X’ சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.


“எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. வரும் ஜூன் 9-ஆம் தேதி நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மா ஆசீர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.

அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்தத் திருமணத்தை எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் இந்தத் திருமணப் பத்திரிக்கையை இணையத்தில் பகிர்ந்துவிட்டார். பத்திரிக்கை எப்படி வைரல் ஆனதோ அதுபோல, மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்ற விஷயமும் வைரலாகி இருக்கிறது. அது உண்மை இல்லை.


எங்கள் பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்துங்கள். திருமணம் முடிந்ததும் புகைப்படங்களைப் பகிர்கிறேன். திருமண வரவேற்பில் நிச்சயம் அனைவரையும் சந்திப்போம்” என்று கலகலப்பாக பதிவிட்டிருக்கிறார்.
நமது V4U மீடியாவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.