தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் அபர்ணாதாஸுக்கும், மலையாள நடிகர் தீபக் பரம்போலுக்கும் திருமணம் நேற்று கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

மலையாளத்தில் ‘ஞான் பிரகாஷன்’(Njan Prakashan),‘மனோஹரம்’,’பிரியன் ஒட்டத்திலானு’ போன்ற திரைப்படங்களிலும், தமிழில் ‘தளபதி’விஜயுடன் நடித்த ‘பீஸ்ட்’,‘டாடா’ போன்ற திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்;

அதேபோல மலையாளத்தில் வெளியான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், தட்டத்தின் மறையத்து, குஞ்ஞி இராமாயணம், லவ் ஆக்சன் டிராமா, இன்ஸ்டாகிராமம், கண்ணூர் ஸ்குவாட், மஞ்ஞுமல் பாய்ஸ், வருஷங்களுக்கு சேஷம் போன்ற திரைப்படங்களிலும் நடித்த நடிகரான தீபக் பரம்போல் இருவருக்கும் திருமணமானது, இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று 24-4-2024 புதன்கிழமை கேரளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான ‘சங்கீத்’ போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து அபர்ணா தாஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் காணொளிகள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

மலையாள நடிகரும் இயக்குனருமான வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் அன்வர் சாதிக் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘மனோஹரம்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையை சார்ந்த அனைத்து பிரபலங்களும் அவர்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதுமண தம்பதியர் இல்லற வாழ்வில் சிறக்க, நமது V4U மீடியா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.