தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரை பிரபலங்கள் பலரும் அவர்களின் உட்பட்ட வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினார்.

தலைவர் ‘ரஜினிகாந்த்’, மற்றும் அவரின் மகள்களான ‘சௌந்தர்யா ரஜினிகாந்த்’, மற்றும் ‘ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், தளபதி விஜய் நீலாங்கரையிலும், அனிருத், திரிஷா, தனுஷ் பிரான்சிஸ் சேவியர் பள்ளி டிடிகே சாலையிலும், சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் டி நகர் ஹிந்தி பிரச்சார சபாவிலும், மற்றும் பல திரை பிரபலங்கள் அவர்களின் வாக்குகளை செலுத்தினர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு விமான மூலம் சென்னைக்கு வாக்களிப்பதற்காக விஜய் வந்துள்ளார். அதிகாலையில் இருந்தே அவர் இல்லத்தின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சைக்கிளில் வந்து அவர் வாக்களித்தது இணையதளங்களில் பேசும் பொருளானது. இம்முறை நான்கு சக்கர வாகனத்தில் வந்திருந்தார் நடிகர் அஜித் அவரது தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச் சாவடிக்கு முன்னதாகவே வந்து நின்று முதல் நபராக வாக்களித்து சென்றார்.