‘சித்தா’ திரைப்பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான்’விக்ரம் நடித்து வரும் திரைப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் துஷாரா விஜயன் கதையின் கதாநாயகியாக இப்போது இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் மற்றும் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும்.

‘சீயான்’விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் இம்மாதம் வெளி வருவதாக தகவல் வந்திருந்த நிலையில் இத்திரைப்படத்தின் அறிவிப்பு விக்ரம் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.




















