Review By :- V4U Media
Release Date :- 28/02/2020
Movie Run Time :- 2.39 Hrs
Censor certificate :- U/A
Production :- A crowd funding project organized by GM Film Corporation
Director :- Mohan G
Music Director :- Jubin
Cast :- Rishi Richard, Sheela, Karunas, Nishanth, Soundarya, Lena, Seshu, Aaru Bala, Jeeva Ravi, Ilango, Gopinath, subramani
டீஸர் வெளியான நாளில் இருந்தே திரௌபதி படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் கிரவுட் ஃபண்டிங் முறையில் எடுக்கப்பட்ட முதல் படம்.
ஒரு குறிப்பிட்ட சாதியினர், அப்பாவி இளம் பெண்களை ஏமாற்றி போலி திருமணம் செய்து வைத்து அவர்களது பெற்றோரிடமிருந்து பணம் பறிப்பதை பற்றி மிக தெளிவாக சொல்லியுள்ளார் இயக்குனர் மோகன். ஒரு குறிப்பிட்ட சாதி இயக்கத்தினர் இதை ஒரு தொழிலாகவே செய்வதை பார்க்கும் போது நமக்கு பதட்டம் வருகிறது. காதல் பதிவு திருமணங்களில் பல திருமணங்கள் போலியாக அமைகிறது என்கிற இயக்குனரின் கருத்து பாராட்டுகளை பெறுகிறது.
நாயகன் ரிச்சர்டு சைக்கிளில் டீ விற்கும் போதும் சரி, சிலம்பம் கற்று தரும் வாத்தியாராக இருக்கும் போது சரி தனது நடிப்பால் மிரட்டியுள்ளார். நாயகி “டுலேட்” ஷீலா வுக்கு கம்பீரமான ரோல். கருணாஸ், நிஷாந்த், சௌந்தர்யா, லீனா, சுஷு, ஆறு பாலா, ஜீவா ரவி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஜுபின் பின்னணி இசை படத்துக்கு பலம்
அங்கங்கே லாஜிக் ஓட்டைகள், படத்தின் நீளம் என சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் அனைவருக்கும் பிடிக்கும்.
திரௌபதி – சாதியக்கொலைகளுக்கு எதிரான சமூக விழிப்புணர்வு திரைப்படம்