V4UMEDIA

Gypsy

Review By :- V4U Media

Release Date :- 06/03/2020

Movie Run Time :- 2.29 Hrs

Censor certificate :- A

Production :- Olympia Movies

Director :- Raju Murugan

Music Director :- Santhosh Narayanan

Cast :- Jiiva, Natasha Singh, Lal Jose, Sunny Wayne, Susheela Raman, Vikranth Singh

காஷ்மீர் போரில் ஆரம்பமாகிறது கதை. அங்கு நடக்கும் துப்பாக்கி சூட்டில் ஜிப்ஸி (ஜீவா) பெற்றோர் இறந்துவிட, குதிரையை வைத்து வேடிக்கைகாட்டும் ஒருவரால் வளர்க்கப்படுகிறான் . இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்கிறார். கிடைத்த வேலையை செய்து சந்தோசமாக வாழ்கிறார். ஒரு முறை நாகூருக்கு வரும்போது, அங்குள்ள இஸ்லாமியப் பெண் நடாஷா சிங்கை பார்க்கிறார். ஜீவாவை பார்த்ததும் நடாஷா காதலிக்கிறாள். இருவரும் வட மாநிலம் ஒன்றுக்குச் சென்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் நடக்கும் மத கலவரத்தில் சிக்கி இருவரும் பிரிகிறார்கள். மனைவியை பிரிந்து ஜெயிலுக்கு செல்கிறார் ஜீவா. ஒரு வருடம் கழித்து வெளிய வரும் ஜீவா தனது மனைவி அந்த கலவரத்தில் நடந்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்பதை கண்டு நந்து போகிறார். கலவரத்தில் என்ன நடந்தது ? இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.

ஜிப்ஸி எனும் நாடோடி வேடத்துக்குப் பொருத்தமான தோற்றத்தில் இருக்கிறார் ஜீவா. சே என்று அவருடன் இருக்கும் குதிரை செய்யும் சாகசங்கள் மற்றும் குதிரையிடம் அவர் உரையாடும் காட்சிகள் அவ்ளோ அழகு. இரண்டாவது பாதியில் சிறுநீர் கழிக்க விடாமல் போலீஸ் பழி வாங்கும் போதும் சரி, ஜீவா திருப்பி போலீஸ்க்கு பதில் அடி கொடுக்கும் விதம் சிறப்பு.

நடிகை நடாஷா விற்கு இது முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அப்படி ஒரு எதார்த்த நடிப்பு. வசனங்கள் இல்லாத காட்சிகளில் கூட கண்களாலே பேசுகிறார். ​

நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் லால் ஜோஸ், இஸ்லாமியர்களின் மதநம்பிக்கை காரணமாக அந்த வீட்டுப் பெண்கள் படும்பாட்டை உணரவைக்கிறார். இந்தியாவின் அமைதிக்காகப் பாடும் சுசீலாராமனின் பாத்திரப்படைப்பு நன்று.

ஆக்ரோசமாகக் இஸ்லாமியர்களை வெட்டிச் சாய்க்கும் சோனுகுமார், இந்து மதத்துக்காக என்று சொல்லித்தான் இத்தனையையும் செய்யச் சொன்னாங்க, ஆனா கோயிலுக்குள் போனதும் தீட்டுன்னு சொல்லி என் கைகளை வெட்டிட்டாங்க எனும் போது இந்து மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை தோலுரித்து காட்டியுள்ளார். 

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம்,தேசாந்திரி மகிழ வைக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் பலம்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் இந்தியாவின் இயற்கை அழகையும், வடநாட்டு கலவரத்தையும், அங்கு நடக்கும் கொடுமைகளையும் தத்துருபூமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தையும் மிக தத்துருபூமாக எடுத்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன்

படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்.

மிகவும் அழுத்தமான கதையை மேலோட்டமாக சொல்லாமல், கலவரத்தின் பின்னணியில் யார் உள்ளனர், எதற்கு எப்படி செய்கிறார்கள். இந்தியாவில் மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகள் என நெத்திபோட்டில் அடித்தது போல் கூறியுள்ளார் ராஜு முருகன். 

“ஜிப்ஸி” – ஜாதி மதங்களை கடந்து மனிதமே உயர்ந்தது என்று தனது அழுத்தமான கருத்தை பதிய வைத்துள்ளார் இயக்குனர் ராஜு முருகன்.

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4U Media Release Date :- 06/03/2020 Movie Run Time :- 2.29 Hrs Censor certificate :- A Production :- Olympia Movies Director :- Raju Murugan Music Director :- Santhosh Narayanan Cast :- Jiiva, Natasha Singh, Lal Jose, Sunny Wayne, Susheela Raman, Vikranth...Gypsy