பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘ஜெய் பீம்’ புகழ் த.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்திற்கு சென்றிருந்தபோது, பரபரப்பான படப்பிடிப்பிற்கு நடுவே, இந்தியாவின் முன்னணி தனியார் உள்கட்டமைப்பு நிறுவனமான எல்என்டி-யால் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.

அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும் தலைமைச் செயல் அலுவலருமான கே.வி.பி.ரெட்டி மற்றும் முதன்மை அலுவலர்களும் அவரை வரவேற்றனர்.மேலும் ஹைதராபாத் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளையும் விவரித்தனர்.

மிக முக்கியமான பிரபலம் எல் & டி ஹைதராபாத் மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வருகை புரிந்தது, தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக தாங்கள் கருதுவதாகவும்,தங்களுக்கு பெருமையளிப்பதாகவும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வளைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.