V4UMEDIA
HomeReviewPenguin

Penguin

Review By :- v4u media

Release Date :- 19/06/2020

Movie Run Time :- 2.12 Hrs

Censor certificate :- U

Production :- Stone Bench Films & Passion Studios

Director :- Eashvar Karthic

Music Director :- Santhosh Narayanan

Cast :- Keerthy Suresh Riya Manoj Linga Madhampatty Rangaraj Master Advaith Umar Muthazhagan Nithya Kriupa

கதைக் களம்: 

படத்தின் துவக்கமே சார்லி சாப்ளின் முகமூடி அணிந்து, கையில் குடையுடன் இருக்கும் மிரட்டலான ஒருவன், ஒரு குழைந்தையை தாக்குவது போல் காட்சி. கட் செய்தால் மறுபுறம் படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ்(ரிதம்), முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது குழந்தை அஜய் (அத்வைத்) உடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என நினைக்கும் போதே, அந்த மர்ம நபர் குழந்தையை கடத்தி செல்கிறான். ஆண்டுகள் சென்றாலும் என் மகன் கண்டிப்பாக வருவான் என்கிற எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் கீர்த்தி, குழந்தை மீண்டும் வந்தானா? யார் அந்த மர்ம நபர்? அம்மாவாக கீர்த்தி சுரேஷின் போராட்டங்கள் என்ன? என்பதே த்ரில்லரான மீதிக் கதை.

Penguin Movie Review and Rating
விமர்சனம்:

‘பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தொடர்ந்து தமிழில் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது படம் பெண்குயின். நடிகையர் திலகம் படத்தைத் தொடர்ந்து கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், ஒரு அம்மாவாக பிள்ளையை துளைத்த பரிதவிப்பு, கர்ப்பிணி பெண்ணாக அந்த மர்மநபருடன் போராடுவது, எமோஷனல் காட்சிகள் என தனது நடிப்பில் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். மற்ற கதாப்பாத்திரங்கள் பொறுத்தவரை தேர்வு மற்றும் நடிப்பு அடிப்படையில் அவ்வளவு திருப்தியில்லை.

Penguin Movie Review and Rating

ஒளிப்பதிவும், படத்தில் வரும் லொகேஷன்களும் படத்திற்கு பெரியளவில் பலமாக அமைந்துள்ளது, மேலும் காட்சியின் பரபரப்பை மேலும் சுவாரஸ்ய மூட்டுகிறது, ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனிக்கு வாழ்த்துக்கள். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை பல இடங்களில் பலம். எடிட்டிங் இன்னும் கொஞ்சம் படத்தின் லாகிங்கை தவிர்த்திருக்கலாம். இப்படத்தின் ஒன் லைன் கதையோ, டீசரோ ஏற்படுத்திய அந்த சுவாரஸ்யத்தை முழுபடமும் கொடுக்க தவறியது என்று தான் சொல்ல வேண்டும். பாராட்டத்தக்க காட்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் பல இடங்களில் செயற்கைத் தனமும், லாஜிக் மீறல்களும் நம்மை நெருங்கவிடாமல் செய்கிறது. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் கூட ஓகே ரகமாகதான் அமைந்துள்ளது. இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் எடுத்துக்கொண்ட கதையும், களமும் புதிது என்றாலும், திரைக்கதையில் இன்னும் வேலை செய்திருக்கலாம். இருந்தாலும், ஒரு தாயின் பாச போராட்டத்தை கட்சிதமாக பதிவு செய்துள்ளார். இறுதியாக, விமர்சன ரீதியாக இவ்வளவு குறைகள் இருந்தாலும், குடும்பத்துடன் கண்டு (ரசிக்ககூடிய) விதத்தில் தான் அமைந்துள்ளது இந்த பெண்குயின்.

Most Popular

Recent Comments

Review By :- v4u media Release Date :- 19/06/2020 Movie Run Time :- 2.12 Hrs Censor certificate :- U Production :- Stone Bench Films & Passion Studios Director :- Eashvar Karthic Music Director :- Santhosh Narayanan Cast :- Keerthy Suresh Riya Manoj Linga Madhampatty...Penguin