V4UMEDIA
HomeNewsKollywoodஉலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகும் தருணத்தில், 'கேப்டன் மில்லர்'படத்திலிருந்து ஐந்தாவது பாடல் வெளியானது !

உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகும் தருணத்தில், ‘கேப்டன் மில்லர்’படத்திலிருந்து ஐந்தாவது பாடல் வெளியானது !

பாரம்பரிய மிக்க சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G.தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில்,அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் ‘தனுஷ்’ கதாநாயகனாக நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ பொங்கல் வெளியீடாக நாளை வெளியாவதை ஒட்டி, படத்தின் ஐந்தாவது பாடல் இன்று வெளியானது.

சமீபத்தில் பாடல் வரி காணொளிகள்(Lyric Videos) தொடர்ச்சியாக வெளிவந்தன. பின்னர் பட வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி(Pre release event) கடந்த 03/01/2024-அன்று நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதனிடையே 06/01/24-கடந்த சனிக்கிழமை படத்தின் அதிரடியான முன்னோட்டம் வெளியானது. படம் நாளை உலகமெங்கும் வெளியாவதை ஒட்டி படத்தின் ஐந்தாவது பாடல் இன்று வெளியிடப் பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் ‘தனுஷ்’ படங்களிலேயெ பிரம்மாண்டமாக,லைகா புரொடக்ஷன் நிறுவனம் வெளிநாடுகளில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறது.

Most Popular

Recent Comments