V4UMEDIA
HomeReviewEeswaran

Eeswaran

Review By :- V4u media

Release Date :- 14/01/2021

Movie Run Time :- 2.15 Hrs

Censor certificate :- U

Production :- D Company Production

Director :- Susienthiran

Music Director :- Thaman S

Cast :- Silambarasan TR, Bharathiraja, Nidhhi Agerwal, Nandita Swetha, Bala Saravanan, Munishkanth, Kali Venkat, Manoj Bharathiraaja, Harish Uthaman, Stunt Siva & Others

நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14ம் தேதி பொங்கல் விருந்தாக இன்று தமிழகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக 200 திரையரங்கில் கோலாகலமாக வெளியானது.

சிம்பு, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா, முனீஸ்காந்த், பால சரவணன், ஸ்டன்ட் சிவா, காளி வெங்கட் என பலர் நடித்துள்ளனர்.

Eeswaran Movie HD Stills

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய கூட்டு குடும்பத்தில் வரும் பிரச்சனைகளும், அந்தப் பிரச்சனைகளை அவருக்குத் துணையாக நின்று ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பது தான் படத்தின் ஒரு வரி கதை.

பெரியசாமியாக வரும் பாரதிராஜா நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். சொல்லப்போனால் கதாநாயகன் சிம்புவைவிட இவருடைய கதாபாத்திரத்தில் அழுத்தம் அதிகம்.

படத்தின் துவக்கத்திலும் நடுவிலும் சோழியை வைத்து குறிசொல்லும் காளி வெங்கட்டின் பாத்திரம் பரட்டப்படும். பாலா சரவணன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

சிம்புவுக்கும் நித்தி அகர்வாலுக்கும் இடையிலான காதல் காட்சிகள் பிரேஷ். நித்தி அகர்வால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். தமிழ் சினிமாவில் இது தான் அவருக்கு முதல் படம் ஆனால் முதல் படத்திலேயே ஸ்கோர் செய்துள்ளார். நிச்சயமாக நித்தி அகர்வால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரவுண்ட் வருவார் என்பதில் சந்தேகமில்லை.

படம் ஆரம்பித்த 45 நிமிடங்கள் வரை பெரிதாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விவசாயி பெரியசாமியின் வாழ்க்கை வரலாறு மாதிரி படம் மெதுவாக நகர்கிறது. இதன் பின் தான், வழக்கம் போல குடும்பத்தின் சொத்தை அடைய நினைக்கும் சொந்தங்கள், அதற்காக செய்யப்படும் வில்லத்தனங்கள் என சற்றே சுவாரஸ்யதுடன் நகர ஆரம்பிக்குறது கதை.

Eeswaran Movie HD Stills

இந்தப் படம் சிம்புவுக்கு நிச்சயமாக ஒரு வெற்றி படமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆக்ஷன், அழுகை, காமெடி என எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார். எஸ்.தமனின் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை மிக சிறப்பாக இருக்கிறது.பொங்கலுக்கு குடும்பத்துடன் பார்க்கலாம் தாராளமாக ‘ஈஸ்வரன்’.

Most Popular

Recent Comments

Review By :- V4u media Release Date :- 14/01/2021 Movie Run Time :- 2.15 Hrs Censor certificate :- U Production :- D Company Production Director :- Susienthiran Music Director :- Thaman S Cast :- Silambarasan TR, Bharathiraja, Nidhhi Agerwal, Nandita Swetha, Bala Saravanan, Munishkanth, Kali...Eeswaran