V4UMEDIA
HomeNewsKollywoodசூப்பர் ஸ்டார் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம்

இந்த வருடம் தீபாவளி திருநாள் தமிழ் வருடம் சோபகிருது 7-வது மாதம் ஐப்பசி 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை[12/11/2023] இந்தியா முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப் பட்டது. அனைத்து தரப்பினருக்கும் இந்த தீபாவளியானது மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது. அதுபோல 2023-ம் ஆண்டு, கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு வந்த பிறகு அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. மகிழ்ச்சியைத் தரும் தீபாவளியைப் போல 2023-ம் ஆண்டு தமிழ்த் திரைத்துறைக்கும் வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியைத் தரும் ஆண்டாக அமைந்தது. அந்த வகையில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களும் சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகி நம்பிக்கைக்குரிய வெற்றி பெற்றன. ‘சூப்பர் ஸ்டார்’ திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு ‘ஜெயிலர்’ வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து அவருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. இந்த மகிழ்ச்சியுடன் 2023-ம் ஆண்டு தீபாவளியை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் தமது மனைவி திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள், மகள்கள் திருமதி.ஐஸ்வர்யா, திருமதி.சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகள் யாத்ரா,லிங்கா மற்றும் வேத் என குடும்பத்தினருடன் விமரிசையாக கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றன. தீபாவளி கொண்டாட்டத்தோடு பொங்கல் திருநாள் வெளியீட்டிற்கு தயாராகி வரும் ‘லால் சலாம்’ படத்தின் டீஸர் 12/11/2023 தீபாவளி தினத்தில் வெளியாகி, அவருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் ‘சூப்பர் ஸ்டார்’ திரு. ரஜினிகாந்த் அவர்கள் தனது தீபாவளி வாழ்த்துக்களை தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளியாக ரசிகர்களுக்கு கூறிக் கொண்டுள்ளார். பொங்கலுக்கு ‘மொய்தீன் பாய்’ ஆக சந்திப்பதாகவும் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments