இயக்குனர் ஷங்கர், கமல் கூட்டணியில் கடந்த 96ல் வெளியான படம் இந்தியன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் லஞ்சத்துக்கு எதிரான மிகப்பெரிய தாக்கத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழிந்து விட்ட சூழலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்கிற பெயரில் தயாராகி வருகிறது.
இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்படத்தில் அறிமுக வீடியோவை நவம்பர் மூன்றாம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹிந்தியில் ஆமீர் கான், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி, கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் இந்த படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட இருக்கின்றனர். படம் 2024 சம்மருக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது