V4UMEDIA
HomeNewsKollywoodயோகிபாபு - விதார்த் கூட்டணியில் உருவாகும் ‘குய்கோ’

யோகிபாபு – விதார்த் கூட்டணியில் உருவாகும் ‘குய்கோ’

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்திற்கு கதாசிரியராக பணியாற்றியவர் அருள்செழியன். இவர் தற்போது முதன்முறையாக இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். தனது முதல் படத்திலேயே விதார்த்தையும் யோகிபாபுவையும் இரண்டு கதாநாயகர்களாக வைத்து படத்தை இயக்கி வருகிறார் அருள் செழியன்.

இந்த படத்திற்கு தற்போது குய்கோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடிக்க முக்கிய வேடங்களில் துர்கா, வினோதினி, இளவரசு, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் மூலம் பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

Most Popular

Recent Comments