V4UMEDIA
HomeReviewKalathil Sandhippom

Kalathil Sandhippom

Review By :- v4u media

Release Date :- 05/02/2021

Movie Run Time :- 2 Hrs

Censor certificate :- U

Production :- Super good films

Director :- N Rajasekhar

Music Director :- Yuvan Shankar Raja

Cast :- Arulnithi Tamilarasu Jiiva Manjima Mohan Priya Bhavani Shankar,Robo shanakar, Radha Ravi, Bala Saravanan

ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவருக்கு அவரும் அவருக்கு இவரும் திருமணத்திற்குப் பெண் பார்க்கிறேன் என களத்தில் இறங்குறார்கள். அதனால் பல குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் களத்தில் சந்திப்போம்.

வாய்ப்பேச்சில் வல்லவராக ஜீவா, அதிரடி வீரனாக அருள்நிதி என இருவருக்கும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

அவன் அடிச்சா வேடிக்கை பார்ப்பேன், அவனை அடிச்சா வேடிக்கை பார்க்கமாட்டேன் என ஜீவா சொல்லும் வசனம் கை தட்டல் அள்ளுகிறது.நாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இருவருக்குமே முக்கியமான கதாபாத்திரம். ராதாரவி, இளவரசு, ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி,ரேணுகா என பலர் நடித்துள்ளனர்.

Image result for kalathil santhippom

நகைச்சுவைக்காக ஜீவா அருள்நிதி ஆகியோருடனே வருகிற ரோபோ சங்கரும் பால சரவணனும் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள்.யுவனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை அருமை. அபிநந்தன் இராமானுஜத்தின் ஒளிப்பதிவில் காரைக்குடி புதிதாக, மிக அழகாக தெரிகிறது.

களத்தில் சந்திப்போம் – ஜெயிக்கும்

Most Popular

Recent Comments

Review By :- v4u media Release Date :- 05/02/2021 Movie Run Time :- 2 Hrs Censor certificate :- U Production :- Super good films Director :- N Rajasekhar Music Director :- Yuvan Shankar Raja Cast :- Arulnithi Tamilarasu Jiiva Manjima Mohan Priya Bhavani Shankar,Robo...Kalathil Sandhippom