சமீபத்தில் அகமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியை ரசிகர்களோடு ரசிகர்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் பார்த்து ரசித்தனர்.
அந்தவகையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவும் இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு களித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கூட்டத்தில் தனது விலை உயர்ந்த 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட செல்போனை தொலைத்து விட்டார் ஊர்வசி.

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஊர்வசி நெட்டிசன்களிடம் தொலைந்து போன தனது செல்போன் குறித்து கூறி யாரிடமேனும் அந்த செல்போன் கிடைத்தால் தன்னிடம் ஒப்படைக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செல்போன் தொலைந்து போனது குறித்து காவல் நிலையத்தில் தான் அளித்துள்ள புகாரின் புகைப்படத்தையும் அதனுடன் இணைத்துள்ளார் ஊர்வசி ரவுட்டேலா.