கடந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் படமும் அதன் பிறகு கிக் படமும் வெளியானது. இதில் டிடி ரிட்டன்ஸ் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. கிக் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இப்படி சமமான நிலையில் இருக்கும் சந்தானம் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தமிழ் சினிமாவின் பிரபல விநியோகஸ்தராகவும் பைனான்சியராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கிறார் கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார்.

பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்

படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் துவங்கி உள்ளன. சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்