சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடன் அழைக்கப்படுபவர். சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, இதுவரை அவர் படங்களே ஏற்படுத்தி வைத்திருந்த பல சாதனைகளை முறியடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வசூல் படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் சூப்பர் ஸ்டார் ரஜினியை தேடி வந்து அவருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கியுள்ளது.
இது எதற்காக என்றால் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியாவில் ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் நடைமுறை இருக்கிறது. இந்த போட்டிகளை சிறப்பு மாதத்தில் அமர்ந்து கண்டு களிப்பதற்கான கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ் என்கிற திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தொகைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.