எண்பது தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ஒரு படத்தில் சில்க் நடித்திருக்கிறார் என்றாலே அந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் முண்டியடிக்கும். அதேபோல வியாபார வட்டாரத்திலும் சில்க் ஸ்மிதாவின் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் மார்க்கெட் இருந்தது.
அதன்பிறகு பல கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் சில்க் ஸ்மிதாவின் இடத்தை யாராலும் இப்போது வரை நிரப்ப முடியவில்லை. இந்த நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா நடித்துள்ளார்.
ஆச்சரியப்பட வேண்டாம்.. சில்க் ஸ்மிதா போன்ற அச்சு அசல் தோற்றம் கொண்ட விஷ்ணுப்ரியா என்பவர் சில்க் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். இந்த படம் 1965 இல் இருந்து 1995 வரையிலான டைம் டிராவல் கதையாக உருவாகி இருக்கிறது.
அதனால் 80களில் காலகட்டத்தில் இந்த கதை நகரும்போது அதில் சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரமும் அந்த காலகட்டத்தில் இடம்பெறுவதாக கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே இந்த கதாபாத்திரத்தை படத்தில் அழகாக இணைத்துள்ளார்கள்.