இயக்குனர் அட்லீ இங்கே தமிழில் தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக நடிகர் விஜய்யின் படங்களை தொடர்ந்து இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனராகவே மாறியவர். இதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டுக்கும் சென்று அங்கே முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி, நகைச்சுவை நடிகராக யோகி பாபு உள்ளிட்ட நம் தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து முதல் போஸ்டரை வெளியிட்டு உள்ளார் ஷாருக்கான்.
ஜவானின் படத்தைப் பற்றிய உற்சாகமும், உத்வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜவான் மீதான அனைத்து அன்பையும் அவர் ரசிகர்களுடன் இணைக்க ஷாருக்கான் இன்று தனது பிரபலமான #AskSRK அமர்வுகளில் ஒன்றை நடத்தினார்.

#AskSRK அமர்வை நிறைவு செய்யும் தருணத்தில் ரசிகர்களுடன் சில வேடிக்கையான அரட்டைப் பேச்சுகளுக்குப் பிறகு, படத்தின் போஸ்டரை வெளியிட்டு, ஷாருக்கான் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஷாருக்கான் தனது #AskSRK அமர்வுகளில் இதற்கு முன் இதை செய்ததில்லை என்பதால், அவரது இந்த செயல்.. அவரது ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
ஷாருக் கான் ஜவானின் புதிய கூல் போஸ்டரை வெளியிட்டார். அதில் அவரது தீவிரமான ‘வழுக்கை’ தோற்றத்தை காட்டினார். இது ஜவான் ப்ரிவியூக்கு பிறகு மிகவும் பிரபலமானது. இந்த போஸ்டர்.. ஏற்கனவே படத்திற்கான உற்சாகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.