கடந்த வாரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் கதையின் நாயகனாக மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலுவின் குணசித்திர நடிப்பு பற்றி தான் பலரும் ஆச்சரியத்துடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு நகைச்சுவை நடிகர் வடிவேலுவை எங்கேயும் பார்க்க முடியவில்லை, ஒரு புதிய வடிவேலு தான் ரசிகர்களுக்கு தெரிகிறார்.

அதே போல நடிகர் பகத் பாசிலும் தனது மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்துடன் ஓய்வு பெற போவதாக சொல்லி வந்த உதயநிதிக்கும் இது ஒரு திருப்திகரமான படமாக அமைந்துவிட்டது.
இந்த நிலையில் வரும் ஜூலை 14ஆம் தேதி இந்த படம் தெலுங்கில் நாயகுடு என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் இந்த படத்தின் டிரைலரை நேற்று நடிகர் மகேஷ்பாபு வெளியிட்டார்.

கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் என தெலுங்கு அறிமுகமான நடிகர்கள் இந்த படத்தில் இருப்பதால் இதை தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.


























