சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது படங்களை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தங்கலான். விக்ரம் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் பசுபதி நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் கேஜிஎஃப் பாணியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் மக்களின் வாழ்க்கையை குறிப்பாக சுதந்திரம் பெற்ற காலகட்டத்திற்கு முன்னால் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் என்பது படத்தின் துவக்கம் முதல் தற்போது வரை வெளியாகி வரும் அவரது போஸ்டர்கள் மூலம் தெரிகிறது.

அதேபோல நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி இருவரும் கூட இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் இதுவரை நடித்திராத கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறி வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 118 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த வருடத்திற்குள்ளாகவே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் விதமாக இந்த படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.