மலையாளத்தில் நேரம், பிரேமம் எனது இரண்டு படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக பிரேமம் படம் அவருக்கு தமிழிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்று தந்தது.
இதற்கிடையே கடந்த வருடம் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கினார் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியது.
இந்த நிலையில் தற்போது மலையாள திரை உலகிற்கு சற்று குட்பை சொல்லிவிட்டு நேரடியாக தமிழிலேயே படம் இயக்குகிறார் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்தின் கதாநாயகனாக நடன இயக்குனரும் பிக்பாஸ் புகழ் போட்டியாளருமான சாண்டி நடிக்கிறார்.
இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மற்றும் கோவை சரளா, சகானா சர்வேஸ், மகாலட்சுமி சுதர்ஷன், சம்பத்ராஜ், சார்லி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு கிப்ட் என டைட்டில் வைத்து அறிவித்துள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்தை ராகுல் என்பவர் தயாரிக்கிறார்