நடிகர் தனுஷ் வாத்தி படம் முடிவடைந்த பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். வாத்தி படத்தில் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தாலும் இளைஞன் போல குறிப்பாக கல்லூரி மாணவன் போன்ற தோற்றத்தில் நடித்திருந்தார் தனுஷ்.
அதே சமயம் கேப்டன் மில்லர் படத்தில் ஹே ராம் கமல் போல நீண்ட தாடி, குடுமி என அவரது ஹேர்ஸ்டைலே வித்தியாசமாக இருக்கிறது. வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்து தற்போது வரை இதே ஹேர்ஸ்டைலில் தான் விழாக்களிலும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் தனுஷ்.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக தனது மகன்கள் மற்றும் பெற்றோருடன் திருப்பதி சென்ற நடிகர் தனுஷ் தனக்கும் தனது மகன்களுக்கும் சேர்த்து முடி காணிக்கை அளித்துள்ளார்.
அதன்பிறகு கோவிலில் வழிபட்டு திரும்பிய தனுஷின் மொட்டை தலையுடன் கூடிய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.