தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்பால் பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்தவர டப்பிங் கலைஞர் ரவீணா ரவி.. பின்னர் ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் நடிகையாகவும் மாறிய இவர் விஷாலின் தங்கையாக வீரமே வாகை சூடும் மற்றும் மிகப்பெரிய வெற்றி பெற்ற லவ் டுடே படத்தில் யோகிபாபுவின் ஜோடியாகவும் நடித்து பிரபலமானவர்.
தனது டப்பிங் பணிகளுக்கு இடையே தன்னைத் தேடி வரும் நல்ல பட வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியாகி உள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் பஹத் பாசிலின் மனைவியாக நடித்திருந்தார்.
ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பல நாயகிகளுக்கு குரல் கொடுத்த இவர் இந்த மாமன்னன் படத்தில் ஒரு வார்த்தை கூட வசனம் பேசாமல் நடித்துள்ளார். இவர் வருவது குறைந்த காட்சிகளே என்றாலும் படம் முழுவதும் ஆங்காங்கே வரும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதேசமயம் இந்த படத்தில் வசனம் பேசாதது ஒன்று மட்டும் தான் தனக்கு வருத்தம் என்று கூறியுள்ளார் ரவீணா ரவி.