மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர்களில் நடிகை அசினும் ஒருவர். விஜய், அஜித், சூர்யா, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இவர் இங்கே கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கிற்கு சென்றார்.
அங்கேயும் வெற்றி கொடி நாட்டில் பின்னர் பாலிவுட்டுக்கு சென்றார் அதன் பிறகு தமிழ், தெலுங்கை மறந்துவிட்ட அவர் இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இந்த நிலையில் தற்போது அசினுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் இருவரும் விரைவில் விவாகரத்து பெற்று பிரியப் போகின்றார்கள் என்றும் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இதற்கு முடுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை அசின் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போது எங்களது கோடை விடுமுறையில் ஒருவர் ஒருவர் அருகே அமர்ந்து எங்களது காலை சிற்றுண்டியை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது இந்த கற்பனையான எந்த விதமான ஆதாரமும் இல்லாத செய்தியை பார்த்தோம்.
வீட்டில் எங்களது குடும்பங்கள் எங்கள் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் பிரிந்து விட்டோம் என்று அப்போது வந்த ஒரு செய்தியை இது ஞாபகப்படுத்துகிறது.
சீரியஸாக சொல்கிறேன் வேறு ஏதாவது சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள்.. இந்த அற்புதமான விடுமுறையில் இந்த செய்தியை படிப்பதற்காக, விளக்கம் சொல்வதற்காக ஐந்து நிமிடத்தை வீணடித்ததற்காக வருந்துகிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.