இமைக்கா நொடிகள், அதன்பிறகு தற்போது விக்ரம் நடித்த கோப்ரா என ஒரு முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தது அவர் இயக்கிய டிமாண்டி காலனி படம் மூலமாகத்தான் ஹாரர் படங்களிலேயே சற்று வித்தியாசமான முயற்சியாக இந்த படத்தை இயக்கியிருந்தார் அஜய் ஞானமுத்து.

அவரது முதல் கதாநாயகனாக அருள்நிதி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் தான், அவருக்கு இமைக்காநொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

டிமாண்டி காலனி படம் வெளியாகி 7 வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் தற்போது உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இதன் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த இரண்டாம் பாகத்திலும் அருள்நிதி தான் கதாநாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் அருள்நிதிக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.