தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. 10 வருடங்களுக்கு முன்பு தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி என்கிற படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் ஒரு கட்டத்தில் தனது திறமையை நிரூபித்து தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் அதைத் தொடர்ந்து இந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
கடத்த அவர்தான் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த வருடம் சல்மான் கானுடன் அவர் இணைந்து நடித்த ஹிந்தி படமும் வெளியாகி வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து மகேஷ் பாபு தற்போது திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நடித்து வரும் குண்டூர் காரம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் பூஜா ஹெக்டே. இந்த நிலையில் அந்த படத்தில் இருந்து பூஜா கிட்டே வெளியேறியுள்ளார் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பூஜா ஹெக்டே, “குண்டூர் காரம் படத்தின் படப்பிடிப்பு இடையே பல நாட்கள் தள்ளிப் போனதால் அதற்காக தான் கொடுத்திருந்த கால்சீட் வீணாகிவிட்டது. அடுத்ததாக அவர்கள் கேட்கும் கால்சீட்டுகளை வேறு படத்திற்கு கொடுத்துள்ளேன். அதனால் குண்டூர் காரம் படத்தில் தொடர்ந்து என்னால் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இருந்து விலகி உள்ளேன்” என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.