கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்நிதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தேஜாவு. ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக வெளியான இந்தப் படத்தை இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கியிருந்தார். இவர் பத்திரிகையாளராக இருந்து இயக்குனராக மாறியவர்.
முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர் அடுத்ததாக தற்போது தருணம் என்கிற படத்தை இயக்குகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது.
முதல் நீ முடிவும் நீ படம் மூலம் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த கிஷன் தாஸ் இப்படத்தில் நாயகனாக நடிக்க, தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும், பிரபல இளம் நடிகை ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடிக்கிறார்.