V4UMEDIA
HomeNewsKollywoodஅசுரன், துணிவு படங்களை தொடர்ந்து மிஸ்டர் எக்ஸ் படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்

அசுரன், துணிவு படங்களை தொடர்ந்து மிஸ்டர் எக்ஸ் படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்

மலையாள நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் தனது முதல் இன்னிங்ஸிலும் சரி, ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு அவர் மீண்டும் நடிக்க துவங்கிய இரண்டாவது இன்னிங்ஸிலும் சரி முன்னணி கதாநாயகியாகவே கோலோச்சி வருகிறார்.

இதை அடுத்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படம் மூலமாக உள்ளே நுழைந்தவர், இங்கேயும் வெற்றிகரமான நடிகையாக மாறி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இந்த வருட துவக்கத்தில் அஜித் உடன் அவர் இணைந்து நடித்த துணிவு படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தற்போது தமிழில் தனது மூன்றாவது படமாக மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மஞ்சு வாரியர். இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது.

இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க கவுதம் கார்த்திக் வில்லனாக நடிக்கிறார்.. எஃப்ஐஆர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார்.

மரகத நாணயம், பேச்சிலர், கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். சர்தார் காரி ரன் பேபி ரன் விரைவில் வெளியாகியுள்ள தந்தட்டி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது

Most Popular

Recent Comments