நடிகர் தனுஷை பொறுத்தவரை அவருக்கு ஜூன்-21 ஆம் தேதி எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான நாள்.. காரணம் பாலிவுட்டில் அவர் முதன்முதலாக நடித்த ராஞ்சனா திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி தான் வெளியானது.
அவரது மகனின் பிறந்த நாள் கூட ஜூன்-21 தான். அதுமட்டுமல்ல தனுஷ் கடந்த 2019ல் ஹாலிவுட்டில் முதன்முறையாக நடித்த தி எக்ஸ்ட்ரார்டினரரி ஜர்னி ஆப் பக்கீர் என்கிற படமும் இதே போல ஜூன் 21ஆம் தேதி தான் வெளியானது.
இந்த நிலையில் அவர் முதன்முதலாக நடித்த ராஞ்சனா திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 வருடங்கள் நிறைவடைகிறது. இதை கொண்டாடும் விதமாக ஹிந்தியில் தனது புதிய படத்தை அதிலும் மீண்டும் இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் தான் மூன்றாவது முறையாக இணையும் ஹிந்தி படம் குறித்த அறிவிப்பையும் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு தேரே இஷ்க் மெயின் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முன்னோட்ட வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது