V4UMEDIA
HomeNewsKollywood”2023 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தன் கைகளாலேயே பரிசு வழங்கி பாராட்டிய தளபதி விஜய்”

”2023 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தன் கைகளாலேயே பரிசு வழங்கி பாராட்டிய தளபதி விஜய்”

தளபதி என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நுழைந்து 30 வருடங்களை கடந்து விட்டார். இந்த நிலையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி தனது 49 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த பல வருடங்களாகவே தனது ரசிகர் மன்றத்தை அகில இந்திய விஜய மக்கள் இயக்க நன்ற்பணி மன்றமாக மாற்றி அவர்கள் மூலமாக பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் என ஏராளாமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அந்தவகையில் கடந்த 2௦23ஆம் வருடம் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியரை பாராட்டி அவர்களுக்கு ஊக்கப்பரிசு தொகையும் வழங்க திட்டமிட்டிருந்த நடிகர் விஜய், அதற்காக இன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பரிசு பெற்ற மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகச்சிக்கான ஏற்பாடுகளையும் அனைத்து தொகுதியில் இருந்தும் மாணவர்களை தேர்வு செய்து, அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து இந்த நிகழ்விற்காக ஒருங்கினகும் பணியை விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி என். ஆனந்த் செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆரவார வரவேற்புடன் அரங்கில் நுழைந்தார். முன் வரிசை இருக்கையில் அமர்ந்த விஜய்யிடம் மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் தனது கைப்பட வரைந்த விஜய்யின் ஓவியத்தை கொடுக்க நெகிழ்வுடன் பெற்றுக்கொண்ட விஜய் அவனை கட்டியணைத்து பாராட்டினார். ஆரம்பத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவர் பின்னர் எழுந்து சென்று மாணவர்களின் மத்தியில் சென்று அமர்ந்ததுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

பின்னர் இந்த நிகழ்வில் நடிகர் விஜய் பேசும்போது, “நான் நான் நிறைய ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசி இருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுவது இதுதான் முதன்முறை. மனதிற்குள் ஏதோ ஒரு மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி வந்தது போன்று நான் உணர்கிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

“உன்னில் என்னை காண்கிறேன்” என்று வார்த்தை சொல்லப்படுவது உண்டு உங்கள் அனைவரையும் பார்க்கும்போது எனக்கு என்னுடைய பள்ளி நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போகிறது. நான் உங்களை போல எல்லாம் அவ்வளவு பெரிய புத்திசாலி மாணவன் கிடையாது. ஜஸ்ட் பாஸ் செய்யும் ஒரு ஆவரேஜ் மாணவன் தான். நான் நடிகனாகவில்லை என்றால் ஒரு டாக்டராக ஆகி இருப்பேன் என்றெல்ல்லாம் சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. என்னுடைய கனவு எல்லாம் சினிமா, நடிப்பு என்றுதான் இருந்தது. அதை நோக்கித்தான் நான் பயணப்பட்டேன்.

சமீபத்தில் வெளியான படம் ஒன்றில் இடம்பெற்ற “கார்டு இருந்தா எடுத்துக்குவாங்க.. ரூபாய் இருந்தா பிடுங்கிக்குவாங்க.. ஆனால் படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கவே முடியாது என்கிற வசனம் என்னை ரொம்ப பாதித்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல, எதார்த்தமும் கூட. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் தரப்பில் இருந்து ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாகவே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதற்கான நேரம் தான் இது என்று நான் நினைக்கிறேன்.

இதற்காக உழைத்த தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், விஜய் மக்கள் இயக்க நண்பர்கள் மற்றும் அண்ணன் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எனக்கு பிடித்த ஒரு சில விஷயங்களை மட்டும் இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

கல்லூரிக்கு செல்கிறோம்.. பட்டம் வாங்குகிறோம் என்பது மட்டுமே முழுமையான கல்வி ஆகிவிடாது.. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்ன ஒரு விஷயத்தை இங்கே உங்களுக்கு சொல்கிறேன். நாம் பள்ளிக்கு சென்று படித்த பின்னர் நாம் கற்றுக்கொண்ட அனைத்துமே மறந்துவிட்ட பின்பு எது எஞ்சி இருக்கிறதோ அதுதான் கல்வி என்று கூறியுள்ளார். எனக்கும் இவர் முதலில் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. பின்னர் தான் எனக்கு புரிந்தது படித்த பாடங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் உங்களுடைய கேரக்டர் மற்றும் உங்களுடைய சிந்திக்கும் திறன் தான் உங்களிடம் மிஞ்சி இருக்கும். படிப்பு, தேர்வு, மதிப்பெண்கள் எல்லாமும் முக்கியம் தான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி உங்களது கேரக்டருக்கும் சிந்திக்கும் திறனுக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் தான் அது ஒரு முழுமையான கல்வியாக அமையும்.

உங்களது கேரக்டர் பற்றி சொல்ல வேண்டும் என்றால், ‘உங்களுடைய சொத்தை இழந்தால் எதுவுமே இழந்தது ஆகாது.. உங்களது ஆரோக்கியத்தை இழந்தால் ஏதோ ஒன்றை இழந்ததாக மட்டுமே அர்த்தம்.. ஆனால் உங்களுடைய குணத்தை இழந்தால் எல்லாமே இழந்ததாக அர்த்தம்” என்பார்கள். இவ்வளவு நாள் வரை உங்களுடைய பெற்றோரின் அரவணைப்பில் அவர்களுடைய வழிகாட்டுதலில் அவர்களுடன் வளர்ந்து வந்தீர்கள். இனி கல்லூரி மேற்படிப்பு தொடர்பாக பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். விடுதிகளில் தங்கி படிக்கும்போது புது நண்பர்களுடன் சேர்ந்து பழகும் சூழல் உருவாகும், முதல் தடவையாக உங்களுடைய பெற்றோரின் கண்காணிப்பில் இருந்து விலகி வேறு ஒரு வாழ்க்கையில் நுழைவீர்கள். அங்கு ஒரு சுதந்திரம் உங்களுக்கு கிடைக்கும். அதை சரியாக கையாள தெரிந்து கொள்ள வேண்டும். அந்த சூழலை பொழுதுபோக்குடன் அணுகினாலும் எந்த ஒரு இடத்திலும் உங்களது சுய அடையாளத்தை தொலைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை நம் கையில் தான் என்பதை மனதில் ஏதோ ஒரு மூலையில் பதிய வைத்துக்கொண்டு அதை அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிந்திக்கும் திறன் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இப்போது எங்கு பார்த்தாலும் சோசியல் மீடியா மூலமாக தகவல்கள் நிறைய உங்களைத் தேடி வருகின்றன. இதில் பெரும்பாலானவை போலியான தகவல்கள் தான். சோசியல் மீடியாவில் இதுபோன்று பொய் செய்திகளை பரப்பு வருவதற்கு. கவர்ச்சிகரமான சில தகவல்களை பரப்புவதன் மூலமாக நமது கவனத்தை திசை திருப்பலாம் என்கிற ஒரு மறைமுக பணி கொடுக்கப்பட்டிருக்கும். எதை எடுத்துக்கொள்வது, விட்டு விடுவது, எதை நம்புவது, எது உண்மை, பொய் என நீங்கள் தான் சரியாக அலசி ஆராய வேண்டும். இதற்கு உங்கள் பாட புத்தகங்களையும் தாண்டி நீங்கள் படிக்க வேண்டும்.

எனக்கு ஆரம்பத்தில் படிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் இப்போது புத்தகம் படிக்க துவங்கியுள்ளேன். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது. பெரும்பாலும் படித்தவர்களிடமிருந்து அவர்கள் சொல்ல கேட்பதையே நான் வழக்கமாக வைத்திருந்தேன். அதுதான் மனதில் எளிதாக பதியும் என்பதால். முடிந்தவரை படியுங்கள்.. அம்பேத்கார், காமராஜர், பெரியார் போன்ற எல்லா தலைவர்களையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.. மற்றவற்றை ஒதுக்கி விடுங்கள்.. இதுதான் இன்று நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் செய்தி..

உன் நண்பனை பற்றி சொல்,, நான் உன்னை பற்றி சொல்கிறேன் என சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்று அதெல்லாம் மாறிவிட்டது. நீ எந்த சோசியல் மீடியா பக்கத்தை பின்தொடர்கிறாய் என்று சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்பது போல மாறிவிட்டது.

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள்.. அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.. ஆனால் நம் விரலை வைத்தே நம் கண்ணை குத்துவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. காசு வாங்கி விட்டு ஓட்டு போடுவதன் மூலம் அதைத்தான் நாமும் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் ஓட்டுக்கு காக கொடுத்தால் ஒரு தொகுதியில் ஒன்றரை லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால் கிட்டத்தட்ட 15 கோடி ஆகிறது. ஒருவர் இவ்வளவு தொகை செலவு செய்கிறார் என்றால் அதற்கு முன்னதாக அவர் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும்.. இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

தமிழ்நாடு முழுக்க இருக்கும் ஒவ்வொரு மாணவ மாணவியும் அவர்களது பெற்றோர்களிடம் இனிமேல் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல வேண்டும்.. நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நடக்கும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் தான் அடுத்தடுத்து வரும் நாட்களில் முதல்முறை வாக்காளர்களாக வரப்போகிறீர்கள்.. இதை ஏன் நான் இந்த இடத்தில் சொல்கிறேன் என்றால் இது எப்போது நடக்கிறதோ அப்போதுதான் இந்த கல்வி முழுமை அடைந்ததாக அர்த்தம்..

உங்களுடைய பள்ளியிலோ அல்லது உங்களுடைய தெருவிலோ தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களிடம் அக்கறை எடுத்து அவர்களிடம் நேரம் செலவிட்டு அவர்களையும் வெற்றி பெற ஊக்குவியுங்கள். தேர்வில் வெற்றி பெறுவது எவ்வளவு சுலபம் என எடுத்துச் சொல்லுங்கள். தோல்வி அடைந்த அவர்கள் நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் வெற்றி அடைந்தால் அதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசாக நான் எடுத்துக் கொள்வேன். வெற்றி அடைந்த உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.. தோல்வி அடைந்தவர்கள் சீக்கிரமாகவே வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..

மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு தவறான முடிவையும் எடுக்காமல் வாழ்க்கையில் முன்னேறி செல்ல என் வாழ்த்துக்கள்.. எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாக முன்னிறுத்தி செய்யுங்கள்.. உன்னால் இது முடியாது, உனக்கு இது தெரியாது என்று கூறி உங்களை எப்பொழுதும் உற்சாகம் குறைத்து தைரியம் இழக்கச் செய்யும் ஒரு கூட்டம் இருக்கும். ஆனால் உங்களுக்குள் ஒருத்தன் இருப்பான்.. அவன் என்ன சொல்கிறானோ அதை மட்டுமே கேட்டு நடந்து கொள்ளுங்கள்.. வளர்ப்போம் கல்வி.. வளர்க என் குட்டி நண்பா நண்பி.. இங்கு வந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்

பின்னர் வந்திருந்த மாணவ மனிவியர்க்கு பாராட்டு சான்றிதழும் ஊக்கப்பரிசுத்தொகையும் வழங்கினார் நடிகர் விஜய். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்த, திண்டுக்கல் மாவட்டத்தை 10000. ரூபாய் வருமானத்தில் 3000 ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கும் தச்சு வேலை செய்யும் தொழிலாளி சரவணக்குமார்–பானுப்ரியா தம்பதியின் மகளான மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த விஜய் அவரது தாயாரின் கைகளாலேயே அதை அணிவிக்க செய்தபோது அரங்கமே ஆரவாரத்தால் அதிர்ந்தது

Most Popular

Recent Comments