தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது அவர் நடித்துள்ள பொம்மை திரைப்படம் வெளியாகி உள்ளது. ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி தமிழரசன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஒரு பொம்மையின் மீது காதல் கொள்ளும் ஒரு ஓவியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எஸ்.ஜே சூர்யா. பொம்மை கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள எஸ்.ஜே சூர்யாவிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்காக ஒரு வீடியோவில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ள எஸ்ஜே சூர்யா அமிதாப்பச்சனுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இயக்குனர் அமிதாப் பச்சனுடன் எஸ்.ஜே சூர்யா ஒரு படத்தில் இணைந்து நடிப்பதற்கான அறிவிப்பு வெளியானது. சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்ற நிலையில் ஏதோ சில காரணங்களால் அந்த படம் நிறுத்தப்பட்டது. அப்போது இருந்து அமிதாப்பச்சனின் நன்மதிப்பை பெற்று நட்பில் இருந்து வருகிறார் எஸ் ஜே சூர்யா.
இந்த நிலையில் தான் எஸ்.ஜே சூர்யாவின் பொம்மை படத்திற்கு அமிதாப்பச்சன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.