ராதே ஷ்யாம் படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஆதிபுருஷ். இந்த படம் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகிறது. ஓம் ராவத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார்.
இந்த படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபாஸுக்கு ராகவா லாரன்ஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆதிபுருஷ் படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். ஒரு பான் இந்தியா நடிகராக இருந்து கொண்டு ராமர் வேடத்தில் நடித்துள்ள பிரபாஸுக்கு என்னுடைய நன்றி. இளைய தலைமுறைக்கு இராமாயணத்தை கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய சாதனை. இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இவர் இப்படி பாராட்டி உள்ளார் என்றால் நடிகை கஸ்தூரி பிரபா ஸ் நடித்துள்ள ராமன் கதாபாத்திர தோற்றம் குறித்து தனது கிண்டலை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது பிரபாஸின் ராமர் கதாபாத்திரம் பார்ப்பதற்கு ராமர் போல இல்லை மகாபாரத கர்ணன் போல இருக்கிறது என கூறியுள்ளார்.
ஏனென்றால் ராமாயணத்தில் ராமனும் லட்சுமணனும் எங்கேயாவது மீசை வைத்ததாக இதுவரை கேள்விப்பட்டது உண்டா என்று அதற்கு காரணம் கூறியுள்ளார்.
இதுவரை வெளியான படங்கள் அனைத்திலுமே ராமன் லட்சுமணன் இருவரும் மீசை இல்லாமல் தான் நடித்து வந்துள்ளனர். முதன்முறையாக இப்படி பிரபாஸ் மீசை வைத்து நடித்துள்ளதால் கஸ்தூரி தனது கிண்டலை வெளிப்படுத்தி உள்ளார்.