V4UMEDIA
HomeNewsKollywoodசோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய கஜோல்

சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய கஜோல்

பாலிவுட் நடிகை கஜோல் தமிழில் மின்சார கனவு மற்றும் விஐபி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், அதந பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு செலெக்ட்டிவாக மட்டுமே படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் கஜோல.

இதுகுறித்து அவர் கடைசியாக வெளியிட்டுள்ள பதிவில் தற்போது தனது வாழ்க்கையில் சிக்கலான சூழ்நிலையில் தான் இருப்பதால் சோசியல் மீடியாவை விட்டு விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

கஜோல் இப்படி திடீரென சோசியல் மீடியாவை விட்டு விலகும் அளவிற்கு அவரது வாழ்க்கையில் என்ன பிரச்சனை என அவரது ரசிகர்கள் குழப்பத்துடன் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments