V4UMEDIA
HomeNewsKollywoodநான் பெண்ணியவாதி அல்ல ; ஐஸ்வர்யா ராஜேஷ் அன்ஸ்டாப்பபில் ஓபன் டாக்

நான் பெண்ணியவாதி அல்ல ; ஐஸ்வர்யா ராஜேஷ் அன்ஸ்டாப்பபில் ஓபன் டாக்

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவர் மீனா சாப்ரியா. இவர் தான் கடந்து வந்த பயணத்தை, பாதையை அன்ஸ்டாப்பபில் என்கிற பெயரில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.

17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராகிறார் மீனா சாப்ரியா. அதனைத் தொடர்ந்து, “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார் மீனா சாப்ரியா.

இந்த புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.

மீனா சாப்ரியா பற்றி அவர் பேசும்போது, முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன்.  ஆனால், அதன் பின் புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி செல்வது என்று சிந்தித்தேன். பின்பு மீனாவை தொடர்பு கொண்டு, அவரின் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார்.

சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE”ஆக இருப்பது தான் காரணம்.

அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன். நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதிய என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவறானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்” என்று பேசினார்..

Most Popular

Recent Comments