தமிழிலிலேயே கைவசம் அடுத்தடுத்து படங்கள் வைத்திருக்கும் விஜய்சேதுபதி, இன்னொரு பக்கம் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறார். அந்தவகையில் தனது எல்லையை இன்னும் விரிவுபடுத்தும் விதமாக இந்தியிலும் நுழைந்துள்ள விஜய்சேதுபதி, தற்போது மும்பைகார் மற்றும் காந்தி டாக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் மும்பைகார் படம் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது முதல் படமாக வெளியாகிய மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் தான் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல மலையாள தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆகிறது ஆனால் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாகவே ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகும் முதல் இந்தி படம் இப்படி தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமான செய்தியாக தான் இருக்கும்