இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. முதல் படத்திலேயே கவனிக்க வைக்கதத்தக்க நடிப்பை வழங்கிய இவர் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி என்கிற ஆக்சன் படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார்.
அந்த சமயத்தில் தான் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இவரை தேடி வந்தது.
ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து விட்ட வசந்த் ரவி அடுத்ததாக அஸ்வின்ஸ், வெப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் அஸ்வின்ஸ் திரைப்படம் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தை தரும் தேஜா என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக விமலா ராமன் நடித்துள்ளார். சைக்காலஜி ஹாரர் திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது. ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் முன்கூட்டியே வசந்த் ரவியின் அஸ்வின்ஸ் திரைப்படம் வெளியாவது அவருக்கு எந்த அளவுக்கு பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.