தமிழில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு என்கிற படத்தில் நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் இணைந்து நடித்த போது அவர்களுக்குள் காதல் மலர்ந்து அது பின்னர் திருமணத்தில் முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு சினேகா நடிப்பை குறைத்துக்கொண்டு குடும்பத்தை கவனித்து வருகிறார். மேலும் செலெக்ட்டிவ்வான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் விளம்பர படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சினேகாவும் பிரசன்னாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் அவ்வப்போது வதந்திகள் சோசியல் மீடியாவில் வெளியாகி வந்தன. அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பதில் கொடுத்து வந்தனர் பிரசன்னா, சினேகா தம்பதி.

இந்த நிலையில் இவர்கள் தற்போது தங்களது பதினோராவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த திருமண நாளில் தனது மனைவி சினேகா குறித்தும் அவர் தனது வாழ்க்கையில் நுழைந்தபின் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் மகிழ்ச்சியுடன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார் பிரசன்னா.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு நொடியும் நாம் சிறப்பாக வாழ்வோம்.. உன்னை நான் எப்போதும் காதலிக்கிறேன்.. நம்முடைய காதல் உயர்ந்ததாக இருக்கும்.. நம்மைப் பற்றி மில்லியன் கணக்கில் வெளியான அந்த வதந்திகள் தவிடு பொடி ஆகட்டும்.. நாம் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம்” என்றும் குறிப்பிட்டு இதன் மூலம் தங்களைப் பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு ஒரு அதிரடி பதிலடி கொடுத்துள்ளார் பிரசன்னா.