விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறைய படங்கள் துவங்கப்பட்டன. சில படங்கள் கொரோனா தாக்கம் காரணமாக இடையில் தேங்கி நின்றன. ரிலீஸ் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.. சில படங்கள் வெளிவருமா என்கிற சூழல் கூட நிலவியது.

அதேசமயம் அப்படி தயாரான படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே விஜய்சேதுபதி நடிப்பில் தயாரான படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர்.

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்க முக்கிய வேதத்தில் நடிகை கனிகா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் மே 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என திடீரென புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.