V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் மனோபாலா மறைவு ; ரஜினிகாந்த் இரங்கல்.. விஜய் நேரில் அஞ்சலி

நடிகர் மனோபாலா மறைவு ; ரஜினிகாந்த் இரங்கல்.. விஜய் நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா கடந்த சில வருடங்களாக முக்கியமான நகைச்சுவை நடிகர்களை, மனித நேயம் கொண்ட மனிதர்களை தொடர்ந்து இழந்து வருகிறது,. சின்னக் கலைவாணர் விவேக், சமீபத்தில் நடிகர் மயில்சாமி ஆகியோர் இந்த உலகை விட்டு மறைந்தது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய பேரிழப்பு.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான மனோபாலா இன்று திடீரென காலமானது திரையுலகில் மட்டுமல்லாது ரசிகர்களின் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் மனோபாலா, இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரால் நட்புக்காக என்கிற படத்தில் முதன்முறையாக வில்லத்தனம் கலந்த ஒரு காமெடி நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நடிகர் விவேக், நடிகர் வடிவேலு ஆகியோரின் படங்களை தொடர்ந்து தவறாமல் இடம்பெற்று வந்த மனோபாலா, இந்த இருவரது அணியைச் சேர்ந்த நடிகர் என்கிற முத்திரையை பெறாமல் தற்போது இறக்கும் தருவாயில் கூட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். கடைசியாக விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மனோபாலா நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை நேரிலும் சோசியல் மீடியா மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘மனோபாலாவின் மரண செய்தி கேட்டதுமே தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல இயக்கனரும் நடிகருமான அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என தனது இரங்கல் செய்தியை பதிவிட்டார்.

அதேபோல நடிகர் கமல் மனோபாலாவின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலாவின் மரண செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவில் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் ஒருபடி மேலே சென்று மனோபாலாவிற்கு நேரிலேயே இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்தார். கடைசியாக விஜய்யுடன் இணைந்து தான் மனோபாலா லியோ படத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல விஜயநகரங்களில் பல படங்களை மனப்பாடம் நடித்துள்ளார்.

இருவருக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருப்பது பல சமயங்களில் வெளிப்பட்டுள்ளது. மனோபாலாவின் உடல் நாளை இறுதி மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Most Popular

Recent Comments