அஜித் நடிக்கும் அவரது 62 ஆவது படத்திற்கு வழக்கம் போல அவரது வி சென்டிமென்டிலேயே விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டு அஜித்தின் பிறந்த நாளான நேற்று பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார்/
இதற்கு முன்னதாக இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியாகி, அதன் பிறகு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இதை அடுத்து இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளார் என்று ஒரு செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஏதோ சில காரணங்களால் பணியாற்ற முடியாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகிக் கொண்டாலும் அஜித்தின் பிறந்த நாளுக்கும் விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதற்கும் தனது வாழ்த்துக்களை பெருந்தன்மையுடன் தெரிவித்து இருந்தார் விக்னேஷ் சிவன்.
இவரது இந்த செயலுக்கு அஜித் ரசிகர்களும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.